ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் - தேர்தல் பிரச்சாரத்தை : நிறைவு செய்த வேட்பாளர்கள் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி களிலும் 72 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் டி.குப்புராமு (பாஜக), காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), ஜி.முனியசாமி (அமமுக), கண்.இளங்கோ (நாம் தமிழர்), சரவணன் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 19 பேர் போட்டியிடு கின்றனர்.

பாஜக வேட்பாளர் குப்புராமு நேற்று மாலை அரண்மனை பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் சென்றனர். திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் திருப்புல்லாணி பகுதியில் வாக்கு சேகரித்துவிட்டு, ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பரமக்குடி(தனி) தொகுதி அதிமுக வேட் பாளர் சதன் பிரபாகர் எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து வாக்குச் சேகரித்தார். திமுக வேட்பாளர் முருகேசன் கிருஷ்ணா தியேட் டர் பகுதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கி நேருஜி மைதானத்தில் நிறைவு செய்தார்.

திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட் பாளர் கீர்த்திகா முனியசாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வாக்குச் சேகரித்தார். திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் கடலாடி விலக்கு ரோட்டில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று தாலுகா அலுவலகத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

திமுக வேட்பாளர் மகாராஜன் சீதாலட்சுமி பெட்ரோல் பங்க்கில் இருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தை முடித்தார். அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் பேருந்து நிலையம் அருகிலும், மக்கள் நீதி மய் யம் கட்சி வேட்பாளர் குணசேகரன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் பிரச் சாரத்தை முடித்தனர்.

போடியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியே கட்டபொம்மன் சிலையில் பிரச் சாரத்தை முடித்தார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேவர் சிலை அருகிலும், அமமுக வேட்பாளர் முத்துச்சாமி பேருந்து நிலையம் அருகிலும் பிரச்சாரத்தை முடித்தனர்.அதிமுக வேட்பாளர் சையதுகான் கம்பம் அரசு மருத்துவமனை அருகிலும், திமுக வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் பேருந்து நிலையம் அருகிலும், அமமுக வேட்பாளர் சுரேஷ் சிக்னல் அருகிலும், நாம் தமிழர் வேட்பாளர் அனீஸ்பாத்திமா பழைய பேருந்து நிலையம் அருகிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். அதிமுக வேட்பாளர் முருகன் பெருமாள் கோயில் அருகிலும், திமுக வேட்பாளர் சரவணக்குமார் பழைய பேருந்து நிலையம் அருகிலும், அமமுக வேட்பாளர் கதிர்காமு காந்தி சிலை முன்பும், நாம் தமிழர் வேட்பாளர் விமலா அம்பேத்கர் சிலை அருகிலும் பிரச்சாரத்தை முடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்