சேந்தமங்கலம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் நேற்று மாலை நாமகிரிப்பேட்டை பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றபோது காவல் துறையினர் நிறுத்தி காரில் சோதனை செய்ததால் வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக சி.சந்திரசேகரன் உள்ளார். அதிமுக சார்பில் போட்டி யிட 2-வது முறையாக வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியடைந்த சந்திர சேகரன் சுயேச்சையாக களம் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலைதொகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதியில் தனதுஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட சென்றார்.
அப்போது நாமகிரிப் பேட்டை காவல் ஆய்வாளர்சரவணன் மற்றும் போலீ ஸார் வேட்பாளரின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் இருந்து சில ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேட்பாளர் ஆதரவாளர்களுடன் நாமகிரிப்பேட்டை - ஆத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டார்.
இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதையடுத்து பறிக்கப்பட்ட ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலானோர் உறுதியளித் தனர். இதையடுத்து சாலை மறியலை வேட்பாளர் சந்திரசேகரன் கைவிட்டு கலைந்து சென்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago