கரூரில் திமுக இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

கரூரில் திமுக தேர்தல் பணிமனை அருகே திமுகவினர் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 32 இடங்களில் பிரச்சாரம் செய்யவும் இறுதியாக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே பிரச்சாரத்தை முடிக்கவும் அனுமதி கேட்டிருந்தார். இதில் கரூர் நகரில் உள்ள 10 இடங்களிலும், கரூர் பேருந்து நிலைய ரவுண் டானா பகுதியிலும் பிரச்சாரம் செய்ய காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, அனுமதி மறுக் கப்பட்ட இடங்களிலும் பிரச்சார அனுமதி கோரி நேற்று முன்தினம் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்பாலாஜி, வழக் கறிஞர் மணிராஜ் உள்ளிட்டோர் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனுமதி மறுக்கப்பட்ட 10 இடங்களுக்கு பதிலாக மாற்று இடங்களில் பிரச் சாரம் செய்துக் கொள்வதாகவும், இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தேர்தல் பணிமனை அருகே முடிப் பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கரூர் தொகுதி யில் நேற்று செவ்வந்திபாளையம், வெண்ணெய்மலை, வெங்மேடு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த செந்தில்பாலாஜி கரூர் நகரில் அனுமதி மறுக்கப்பட்ட 10 இடங்களை தவிர்த்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட மாற்று இடங் கள் வழியாகச் சென்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே உள்ள திமுக தேர்தல் பணி மனை அருகே பிரச்சாரத்தை முடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்