தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிக்கை:
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு விளைபொருள் கொள்முதலை கைவிட்டு, கொள்முதல் நிலையங்களை திறக்காமல் மூடி வைத்துள்ளது. இதைக் கண்டித்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் இன்று (ஏப்.5) உணவு தானியக் கிடங்குகளை முற்றுகை செய்து போராட்டம் நடத்தவுள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் வேளாண் விரோத சட்டத்தால் வேளாண் விளைபொருள் கொள்முதலை மத்திய அரசு முழுமையாக கைவிடும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் இதேபோன்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பஞ்சாப், ஹரியாணா மாநிலங் களில் இன்று விவசாயிகள் நடத்தும் முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பாமணியில் உள்ள மத்திய உணவு தானியக் கிடங்கை முற்றுகையிடும் போராட்டம் இன்று (ஏப்.5) காலை 10 மணியளவில் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற மறுக்கும் பாஜக, அதற்கு துணைபோகும் அதிமுகவுக்கு விவசாயிகள் இந்த தேர்தலில் தக்கபாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago