தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சி விஜில் (cVIGIL Citizen APP) என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுக்கு பணம் தருதல், பணம் பெறுதல், இலவச பரிசு, மதுபான விநியோகம், தேர்தலின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக உடனுக்குடன் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பறக்கும்படை குழுவுக்கு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தெரிவிக்கப்பட்டு 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
ஒருவர் இந்த செயலியின் மூலம் புகார் அளிக்கும்போது புவிக்குறியீடு அம்சம் இருப்பதால் சம்பவத்தின் துல்லியமான இருப்பிடத்தை அறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே, கூகுள் பிளே ஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் புகார்களை அனுப்பலாம் என்று தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷ்ணு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago