திருவண்ணாமலையில் 108 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த மாதம் 30-ம் தேதி 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அதன்பிறகு, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், நேற்று 108 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பாதிவாகியிருந்தது. 6 நாட்களில் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.
வெயிலின் தாக்கம், மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கி வருகின்றனர். எனவே, அவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பகல் நேரங்களில் வெளியே நடமாட்டத்தை குறைத்து கொள்ள வேண்டும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும், தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago