திமுக, கூட்டணிக்கட்சியினர் இன்றுவீடு, வீடாக வாக்கு சேகரிக்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்டதிமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் நான் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரில் வந்து வாக்கு சேகரிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். நமது மாவட்டத்தில் நடைபெற்ற கிராம பைக் கூட்டமாக இருந்தாலும், எந்த போராட்டமாக, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதன்மையாக இருந்துள்ளோம். தற்போது திமுக கூட்டணி வெற்றிபெற்று நமது திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஆகவே நமதுமாவட்டத்தில் அனைத்து தொகுதி களிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இணைந்து ஒற்றுமையுடனும் தேர்தலில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று காலை அனைத்து பகுதிகளிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து நமது வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத்திடவும். தாங்கள் தேர்தல் பணியை கவனமுடனும், பொறுப்புடனும் செய் தால்தான் இந்த கடினமான சூழ் நிலையில் எனது பணிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த அங்கீ காரமாக இருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் நமது மாவட்டத்தில் சுறுசுறுப்பாக தேர் தல் பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago