செய்யாறு அருகே வீட்டின் தோட்டத்தில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த ரூ.78 ஆயிரம் மதிப்பிலான 560 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 507 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேசன். இவரது வீட்டில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, செய்யாறு காவல்துறையினர், வெங்கடேசன் வீட்டில் நேற்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த ரூ.78,500 மதிப்பிலான 560 மதுபாட்டில்கள், பறிமுதல் செய்தனர்.
இது குறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைதுசெய்தனர். தேர்தல் நாளில், கள்ளச்சந்தை மூலம் பதுக்கி வைக்கப்பட் டுள்ள மதுபாட்டில்களை விற்பனை செய்ய இருந்ததாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
இதேபோல், கீழ்நேத்தப் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தியிடம் இருந்து 18 பாட்டில்கள், சக்திவேலிடம் இருந்து 15 பாட்டில்கள், புத்தூர் கிராமத்தில் வசிக்கும் பிரசாந்த்திடம் இருந்து 8 பாட்டில்கள், சிறியவேளிய நல்லூர் கிராமத்தில் வசிக்கும் சரவணனிடம் இருந்து 12 பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம்
வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் சோதனையில், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக சார்பனாமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ் (33), சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஜெகதீஷ் (21), அருகந்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (37), சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரசுராமன் (33) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கலால் உதவி ஆணையர் சத்யபிரசாத், கோட்ட கலால் அலுவலர் ரமேஷ், உதவி ஆய்வாளர் சித்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று நடத்திய சோதனையில் கொடைக்கல் மோட்டூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 168 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், வாலாஜா அடுத்துள்ள புதுப்பேட்டை பகுதியில் 89 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago