காஞ்சி மாவட்டத்தில் 1,956 பேர் தபாலில் வாக்களிப்பு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 1,956 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் வீட்டில் இருந்தபடியே அஞ்சல் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையும் வழிவகை செய்திருந்தது.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப் பதிவு குழுக்கள் மூலம் மார்ச் 28, 30 ஆகிய இரு நாட்களில் தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட நாட்களில் தவிர்க்க முடியாத சூழலில் வீட்டில் இல்லதாவர்களுக்கு மார்ச் 31-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஏப்ரல் 1-ம் தேதிவரை 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் இருந்து 1,593 வாக்குகளும், மாற்றுத் திறனாளி வாக்காளர்களிடம் இருந்து 363 வாக்குகளும் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட வாக்குகள் பாதுகாப்பு அறையில் சீல் இட்டு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்