தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களுக்கு மலர்கள் தூவி கட்சியினர் வரவேற்பு அளிப்பதால், பூக் களுக்கு அதிக விலை கிடைப்பதாக விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேட்பாளர்களுக்கு அவர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும், கட்சியினர் மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளிக்கின்றனர். கிராமப் புறங்களில் பெண்கள் மலர்கள் தூவி வரவேற்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.
இதேபோல் வேட்பாளர் களுக்கும், நட்சத்திர பேச் சாளர்கள், அக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் 7 அடி உயரத்திற்கு ரோஜா மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளிக்கின்றனர். இதனால் மலர் விற்பனை தொய்வு இல்லாமல் விலை சராசரியாக கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை வாரிய இயக்குநரும், மலர் விவசாயியுமான பாலசிவபிரசாத் கூறும்போது, மார்ச் மாதங்களில் பொதுவாக ரோஜா, கொய்மலர்கள், உதிரி பூக்களான பட்டன் ரோஸ், செண்டுமல்லி உள்ளிட்டவை விலை சரிந்து காணப்படும். போதிய விலை கிடைக்காமல் குப்பையில் வீசும் அவலநிலை இருக்கும்.
இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்தாமல், இயற்கை மலர்கள் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், கிராமங்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களை வரவேற்க உள்ளுர் கட்சியினர், அங்குள்ள மலர் விவசாயிகளிடம், பூக்களை விலைக்கு வாங்குகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு, நேர மிச்சம் உள்ளிட்டவை குறைகிறது. இருந்தாலும் ஓரளவிற்கு தான் விலை கிடைக்கிறது. ரோஜா மலர்களை பொறுத்தவரை ரூ.4 முதல் ரூ.4.50 என சராசரி விலைக் கிடைக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் என்பதால், நிகழாண்டில் மார்ச் மாதம் விவசாயிகளுக்கு பெரிய இழப்புகள் ஏற்படாமல் ஓரளவிற்கு கைகொடுத்துள்ளது. மலர்களுக்கு சராசரியான விலை கிடைத்துள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago