‘பயிற்சி மையத்தில் வாக்களிக்காதவர்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அளிக்கலாம்’ :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி மையத்தில் அஞ்சல் வாக்குகளை செலுத்தத் தவறிடும் தேர்தல் பணி அலுவலர்கள், அஞ்சல் வழியாக மட்டுமே தங்க ளின் வாக்குகளை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: புதுக் கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்களுக்கான 3-வது பயிற்சி வகுப்பு இன்று(ஏப்.3) நடைபெறவுள்ளது. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அஞ்சல் வாக்குச் சீட்டு பெற்றுள்ள தேர்தல் பணி அலுவலர்கள், தங்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு மற்றும் உறுதி மொழிப் படிவத்தை தாங்கள் பயிற்சி பெறும் பயிற்சி மையத்தில் வைக்கப்படும் அஞ்சல் வாக்குப் பெட்டியில் செலுத்தலாம்.

இந்திய தேர்தல் ஆணையத் தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட மாட்டாது. எனவே, பயிற்சி மையங்களில் அஞ்சல் வாக்கு செலுத்த தவறிடும் பணியாளர்கள் அஞ்சலகங்களைப் பயன்படுத்தி, அஞ்சல் வழியாக மட்டுமே தங்களின் அஞ்சல் வாக்கை செலுத்த வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்