கரூர் மாவட்ட புதிய ஆட்சிய ராக பிரசாந்த் மு.வடநேரே, புதிய காவல் கண்காணிப்பாளராக சுஷாங்சாய் ஆகியோர் நேற்று பொறுப் பேற்றுக் கொண் டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சு.மலர்விழியை தேர்தல் ஆணையம் தேர்தல் பணி அல்லாத பணிக்கு நேற்று முன்தினம் மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, சு.மலர்விழி தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக இணை மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டார்.
அப்பொறுப்பில் இருந்த பிரசாந்த் மு. வடநேரேவை கரூர் மாவட்ட ஆட்சியராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக் கப்பட்ட பிரசாந்த் மு.வடநேரே ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன் திருவண்ணாமலை, கட லூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றி உள்ளார்.
எஸ்.பி பொறுப்பேற்பு
கரூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளராக பணியாற்றிய எஸ்.எஸ்.மகேஸ்வரனை தேர்தல் ஆணையம் தேர்தல் பணி அல்லாத பணிக்கு நேற்று முன்தினம் மாற்றி உத்தரவிட்டது.இதையடுத்து சுஷாங்சாயை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப் பாளராக சுஷாங்சாய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago