மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது, சின்னங்கள்பொருத்துவது உள்ளிட்ட பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் இயந்திரங்கள் தயார் செய்யும் பணி மற்றும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணி, மாவட்டம் முழுவதும் நேற்று தொடங்கியது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும்பணி, வேட்பாளர்களின் விவரங்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும்பணி ஆகியவை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கியது. பணிகளை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணி, வேட்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய சின்னங்களை பொருத்தும்பணி நடைபெற்ற திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மங்கலம் சாலை குமரன் மகளிர் கலைக்கல்லூரியில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், காங்கயம் - கோவை சாலை பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் திருமண மண்டபத்தில் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார், காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago