காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 550 சக்கர நாற்காலிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த சக்கர நாற்காலிகள் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 133 வாக்குச் சாவடிகளும், உத்திரமேரூர் தொகுதியில் 164, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 146, ஆலந்தூர் தொகுதியில் 94 வாக்குச் சாவடிகளும் உள்ளன. மொத்தம் உள்ள இந்த 537 வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க 550 சக்கர நாற்காலிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 136-ம், உத்திரமேரூர் தொகுதிக்கு 167-ம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு 149-ம், ஆலந்தூர் தொகுதிக்கு 98-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சக்கர நாற்காலிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பிரித்து அனுப்பப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago