வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவு :

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்து, அவற்றுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் இப்பணியை நேற்று ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி பேசியது:

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் 6-ம் தேதி நடைபெற உள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகளில் முழுமையாக தங்களு டைய அலுவலர்கள் மூலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இயந்திரத்தில் வேட்பாளர் களின் சின்னம் பொருத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நிறை வடைந்துள்ளன. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரமானது சீல் வைத்து காவல் துறையினரின் பாதுகாப்புடன், பாதுகாப்பு அறை யில் வைக்கப்படும்.

தொடர்ந்து மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் அதிக அளவில் பறக்கும்படைகள், கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன

ஒவ்வொரு தொகுதியிலும் 3 சுழற்சி முறையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவ லர்கள் தங்களது பணியில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோன்று, மாவட்ட அளவிலான மண்டல அலுவலர் கள் மூலமாகவும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE