புனித வியாழனை முன்னிட்டு - கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழனை முன்னிட்டுபாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.

ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தின் இறுதிவாரம் புனிதவாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த புனித வாரத்தில் வியாழக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கும் நடைபெறுகிறது.

பாளையங்கோட்டையிலுள்ள புனித சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் 12 பேரின்பாதங்கள் கழுவப்பட்டன. பங்குத்தந்தை ராஜேஷ், அருட்தந்தை சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நள்ளிரவு 12 மணிவரை நற்கருணைஆராதனை நடைபெற்றது. புனித வெள்ளியான இன்று காலையிலிருந்து மாலை வரை நற்கருணைஆராதனை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருச்சிலுவைப்பாதை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்