திருவண்ணாமலை மாவட் டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மீள் பயிற்சி வகுப்பு நடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் 3-ம் தேதி(நாளை) மீள் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள மீள் பயிற்சி வகுப்பில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தபால் வாக்கு
மீள் பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றதும், அந்தந்த இடங் களில் தபால் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.செங்கம் தொகுதிக்கு திருவண் ணாமலை அரசு கலைக் கல்லூரியும், திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியும், கீழ் பென்னாத்தூர் தொகுதிக்கு கீழ் பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், கலசப்பாக்கம் தொகுதிக்கு கலசப்பாக்கம் செழியன் கல்வி நிறுவனமும், ஆரணி தொகுதிக்கு ஆரணி சுப்ரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியும், செய்யாறு தொகுதிக்கு செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், வந்தவாசி தொகுதிக்கு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மீள் பயிற்சியிலும் வகுப்புகள் நடைபெறவுள்ளன” என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago