ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.24.40 கோடியில் 482 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந் துள்ளன என அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசினார்.
ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், பெரியசேமூர், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், ராம் நகர், பூலாங்காடு, சக்தி நகர், மாணிக்கம் நகர், மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஈரோடு அரசு மருத்துவ மனையில், 100 படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களிலேயே சிகிச்சை பெறும் வகையில், 4 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், ரூ.24.40 கோடியில் 482 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன் பெற்றுள்ளனர். ரூ.2.62 கோடியில் 60 வறட்சி நிவாரண பணிகள், ரூ 20.89 கோடியில் 65.16 கி.மீ., துாரத்துக்கு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.419.76 கோடியில், 15 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, மூன்று பணிகள் ரூ.125 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. ஐந்து பணிகள் ரூ. 270 கோடியில் நடந்து வருகிறது. திருக்கோயில்கள் அன்னதான திட்டத்தின் கீழ், இரண்டு கோயில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கிராமப்புற பகுதியில் உள்ள கோயில்கள் புனரமைப்பு நிதியாக, தலா ஒரு லட்சம் ரூபாய், 19 கோயில்களுக்கு பெற்றுத் தரப்பட்டு, திருப்பணி நடந்துள்ளது. 14 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago