வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே 1 வரை தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலம் அனுப்பலாம் என ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத் திலுள்ள திருவாடானை, பரமக் குடி, ராமநாதபுரம், முதுகுளத் தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று 3-ம் கட்டமாக தேர்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி மையத்திலேயே வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்த அதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது, தேர்தல் பணியில் ஈடுபடும் 7905 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 2472 காவல்துறை அலுவலர்களில் இதுவரை மொத்தம் 9,311 பேர் தபால் வாக்குக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
தேர்தல் பயிற்சி முடிந்த தும் அந்தந்த பயிற்சி மையங் களிலேயே அலுவலர்கள் தங் களது தபால் வாக்குகளை நேரடியாகச் செலுத்திட ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு முன்னதாக ஏப்ரல் 5-ம் தேதி ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமும் தேர்தல் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை நேரடியாக செலுத்தலாம். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே 1-ம் தேதி அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாகவும் அனுப்பலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago