கோயில் திருவிழாவில் மோதல் நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல் :

By செய்திப்பிரிவு

பரமத்தி வேலூர் தெற்கு தெருவில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் சிலர் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது சிலர் தேருக்கு சன்னக்கட்டை போட்டு வந்தனர். சன்னக்கட்டை போட்டு வந்த இஞைர்கள் சிலர் தங்களது அமைப்பைச் சேர்ந்த கொடியுடன் தேரில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தேரை இழுத்து வந்த இளைஞர்களும் தங்களது அமைப்புக் கொடியுடன் தேரில் ஏறினர்.

இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாமடைந்த ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரமத்தி வேலூர் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் தேங்கிநின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த பரமத்தி வேலுார் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் பரமத்தி வேலூர் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதம் தவிர்க்க அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்