திருப்பத்தூர் மாவட்டத்தில் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று 3-ம் கட்ட பயிற்சி :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு இன்று 3-ம் கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ளாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதை யொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவ லர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் கட்ட பயிற்சியும், மார்ச் 27-ம் தேதி 2-ம் கட்ட பயிற்சியும் வழங்கப்பட்டது. தற்போது ஏப்ரல் 1-ம் தேதி இன்று (வியாழக்கிழமை) 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு 4 இடங்களில் நடைபெற உள்ளன.

அதன்படி, திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியிலும், வாணியம்பாடி தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு வாணியம்பாடி, நியூடவுன் பகுதியில் உள்ள இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியிலும், ஆம்பூர் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆம்பூர் இந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜோலார்பேட்டை தொகுதிக் கான வாக்குச்சாவடி அலுவ லர்களுக்கு நாட்றாம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

எனவே, தேர்தல் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் 3-ம் கட்ட பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தங்களுக்கான தபால் வாக்குகளை பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் செலுத்தலாம்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1951, பிரிவு 26-ன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்