ஏப்ரல் 6-ம் தேதி சம்பளத்துடன் கூடிய - விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நாளில் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தேர்தலில் 100 சதவீதம்வாக்குப்பதிவு நடைபெற ஏதுவாக அனைத்து வணிக நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், ஐடி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

புகார்களை தெரிவிக்கலாம்

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 153பி- யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் மாநில அளவிலும், மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, திருப்பத்தூர் மாவட் டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஏப்ரல் 6-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படவில்லை என்றால், தொழிலாளர் துணை ஆய்வாளர் தனசேகரன் 99524-90701 என்ற தொலைபேசி எண்ணிலும், தொழிலாளர் உதவி ஆய்வாளர் மனோகரன் 98654-55010 என்ற தொலைபேசி எண்ணிலும், திருப்பத்தூர் தொழிலாளர் அலுவலக எண்ணான 04179-223405 மற்றும் 87785-47940 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்