மனிதநேயத்தை பாஜக சிதைக்கிறது : சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

By செய்திப்பிரிவு

மனிதநேயத்தை பாஜக சிதைக் கிறது என மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

பழநியில் அத்தொகுதி திமுக வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து அவர் பேசியதாவது:

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதநேயத்தில் நம்பிக்கை இருப்பதால்தான், தமிழகம் சிறந்து விளங்குகிறது. அந்த மனிதநேயத்தைச் சிதைக் கவே பாஜக வேலை செய்கிறது. திமுக வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்தை பாதுகாக்க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உதவும். மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்திலும் ஒருமுகக் கலாச்சாரத்தைக் கொண்டுவர பாஜக துடிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை மூலம், தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜகவுக்கு, அதிமுகவின் இரட் டைத்தலைமை ஒத்து ஊது கிறது. தமிழைச் சிதைக்கும் முயற் சியை மார்க்சிஸ்டும், திமுகவும் அனுமதிக்காது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் லவ் ஜிகாத் தடைச் சட்டம் கொண்டு வருவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதன்மூலம் இந்துத்துவ பாசிச அரசை நிறுவ மோடியும், அமித்ஷாவும் முயல் கின்றனர். ஒருபுறம் பொருளாதாரத் தாக்குதல், மறு புறம் மதவாதத் தாக்குதல் என இரு பக்கங்களிலும் பாஜக தாக்கு தல் நடத்தி வருகிறது. மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திமுக வேட்பாளர் இ.பெ.செந்தில் குமார், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் சச்சிதானந் தம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்