தேர்தல் அலுவலர்களுக்கு இன்று மூன்றாவது கட்ட பயிற்சி :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று (31-ம் தேதி) 3-வது கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது, தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 2741வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி முடிந்த நிலையில், மூன்றாவது கட்ட பயிற்சி இன்று நடக்கிறது.

இந்த பயிற்சியின் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி நடந்த இரண்டாவது கட்ட பயிற்சியில், மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 368 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், 4598 பேர் தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மீதமுள்ளவர்கள் தபால் வாக்குப்பதிவுக்கான படிவங்களை பெற்று, பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (31-ம் தேதி) நடக்கும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அந்தந்த மையங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்