தி.மலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலை கோயில், அஷ்டலிங்க கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை மூலம்உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் காணிக்கையை, பவுர்ணமி கிரிவலம் முடிந்த பிறகு எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்த பிறகு, உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணி யில் ஈடுபட்டனர். அப்போது, உண்டியல் காணிக்கையாக ரூ.71,06,437 இருந்துள்ளது. மேலும், 171 கிராம் தங்கம், 393 கிராம் வெள்ளி ஆகியவை இருந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago