உரிய குடிநீர் கிடைக்காததால் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் (3-வது மண்டலம்) அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக திருப்பூர் - தாராபுரம் சாலை எம்.புதுப்பாளையம் அன்னை நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, "எங்கள் பகுதி பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது. 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். ஆனால், மாநகராட்சி முறையாக குடிநீர் வழங்குவதில்லை. இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. லாரிகளில் தண்ணீர் ஏற்றி வந்து விநியோகம் செய்கின்றனர். நாள்தோறும் கூலி வேலைக்கு செல்வதால், தண்ணீர் வரும் நேரங்களில் பிடிக்க முடியாமல் போகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் மிகுந்த சிரமப்படுகிறோம். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடத்துக்கு ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் வராததால், பயன்படுத்த முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
முறையாக தண்ணீர் தொட்டி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வீதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago