அதிமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு : ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங் களுக்கு பொது மக்களிடையே வரவேற்பு உள்ளதாக ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்தார்.

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, இந்து நகர், லட்சுமி கார்டன், பழையபாளையம், சுத்தானந்தன் நகர் ஆர்ச் பகுதியில் நேற்று வாக்காளர்களை சந்தித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ஈரோட்டில் மேம்பாலம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், அரசு தலைமைமருத்துவமனை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யாக தரம் உயர்த்துதல், காலிங்கராயன் விருந்தினர் மாளிகை முதல் திண்டல் மேடு வரை மேம்பாலம், கனி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம், பேருந்து நிலைய விரிவாக்கம் போன்றவற்றுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பல திட்டங்கள் திட்ட வரைவு நிலையில் உள்ளன.

இத்துடன் அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர், வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு, சமூக ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் ரூ.2,000 என உயர்த்தி வழங்குதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி அமைந்ததும், இந்த திட்டங்கள் தொகுதி மக்களுக்கு விரைவாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்