மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற் சியை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்சியரிடம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சமூக செயல்பாட்டாளர் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப் பட்டது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் கரூர் சமூக செயல்பாட்டாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம் ஆகியோர் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து முகிலன் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி ஆறு தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 15 மாவட்டங் களுக்கு விவசாயத்துக்கு ஆதார மாகவும் விளங்குகிறது. கர்நாடக அரசு மேகேதாட்டுவில் மேட்டூர் அணையின் கொள்ளளவான 90 டிஎம்சி அளவுக்கு நீரை தேக்கி வைக்கும் வகையில் அணை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக கர்நாடக அரசு ரூ.9,000 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக் கையைத் தடுத்து நிறுத்தாமல், மத்திய அரசு துணைபோகிறது. இதற்கு தமிழக அரசு எவ்வித எதிர்ப்பும் காட்டாமலும் இதை தடுக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமலும் உள்ளது. இத னால், கர்நாடக பாஜக அரசுக்கு மறைமுகமாக தமிழக அரசு துணை போவதாக கருதுகிறோம்.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago