முத்துடையான்பட்டி அருகே விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடை யான்பட்டி அருகே நேற்று மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை வட்டம் கல்லாக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாணிக்கம்(55). அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் ராஜ்குமார்(35).

இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் முத்துடையான்பட்டியில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முத்துடையான்பட்டி கடைவீதி அருகே காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கம், ராஜ்குமார் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்