சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர்(தனி) ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தவிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கடபிரியா தெரிவித்தது: பெரம்பலூர்(தனி) சட்டப்பேரவைத் தொகுதி யில் 9 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பெரம்பலூர்(தனி) தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 514 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 514 கட்டுப்பாட்டு கருவிகள், 548 வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்துக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டுக் கருவி, 1 வாக்கு சரிபார்க்கும் இயந்திரம் ஆகியவை பயன்படுத் தப்படவுள்ளன. அதன்படி, 930 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 465 கட்டுப்பாட்டுக் கருவிகள், 497 வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பெரம்பலூர் (தனி) தொகுதியில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், குன்னம் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கர் தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago