வாக்குச்சாவடிகளுக்கு தி.மலை பழைய அரசு மருத்துவமனையில் இருந்து - மருத்துவ பாதுகாப்பு பொருட்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்க, தி.மலை பழைய அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கரோனா தொற்று பரவல் தடுப்பு மருத்துவ பாதுகாப்பு பொருட்களை பிரித்தெடுக்கும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை பாதுகாப்பாகநடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்றும் அலுவலர் கள் மற்றும் ஆசிரியர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் முகவர்கள், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலர்கள் கையுறை அணிந்து பணி செய் யவும் அறிவுரை வழங்கப்பட்டுள் ளது.

மேலும், வாக்குச்சாவடியில் உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படவுள்ளது. வாக்குச்சாவடி நுழைவு வாயிலில், வாக்காளர்களின் கைகளை சுத்தம் செய்யும் வகையில், கிருமி நாசினி வழங்கப்படுகிறது. மருத்துவக் கழிவுகளை சேகரிக்க தொட்டியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும், சுகாதாரத் துறை மூலம் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.

தி.மலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,885 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு கொண்டு செல்லப்பட உள்ள கரோனா பரவல் தடுப்பு மருத்துவ பாதுகாப்பு பொருட்களை பிரித்தெடுத்து, வாக்குச் சாவடிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றாக சேகரிக்கும் பணி, தி.மலை பழைய அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்தப் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன் தினம் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், மருத்துவ பாதுகாப்பு பொருட்களை விடுபடாமல், கவனமாக பிரித்து ஒன்றாக சேர்த்து பேக்கிங் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா உடனிருந்தார். மருத்துவ பாதுகாப்பு பொருட்களை ஒன்றாக சேகரித்த பிறகு, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அந்தந்ததேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஓரிரு நாட்களில் ஒப்படைக்கப்படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்