திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த - 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனாதடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் : ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வரவேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தற்போது அதி கரித்து வருகிறது. ஒற்றை இலக்கில் இருந்த கரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 7,789 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 5,365 பேர் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

7 இடங்களில் பரிசோதனை

கரோனா 2-வது அலை பரவல் காரணமாக நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், மார்க்கெட் பகுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பஜார் பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் கரோனா நோய் தடுப்புப் பணிகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்திப்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 7 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு தினசரி பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் 2 முறை கால இடை வெளியில் போடப்பட்டு வருகிறது. அரசு அறிவிப்பின்படி 45 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அம்மா மினி கிளினிக்குகள், 4 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 57 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

பக்கவிளைவுகள் இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 13,851 பேர், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,493 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட 6,092 பேர் என இதுவரை 24,436 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் எந்தவித பக்கவிளைவுகள் இல் லாமல் ஆரோக்கியமாக அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, திருப்பத்தூரில் நோய் தொற்றை கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். அதற்கான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் போது தவறாமல் ஆதார் அட்டை நகலை கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்