வேலூர் அருகே சாத்துமதுரையில் - போலி மதுபான ஆலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கினார் :

By செய்திப்பிரிவு

வேலூர் அருகே வீட்டில் இயங்கிய போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் அருகேயுள்ள சாத்துமதுரை பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவியின் தம்பி சந்துரு என்பவருடன் கடந்த வாரம் ஏற்பட்ட குடும்பத் தகராறில் சதீஷ்குமார், சந்துருவை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் கிராமிய காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையிலான காவலர்கள் சதீஷ்குமாரை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, காவல் துறையினரை பார்த்ததும் அவர் தப்பி ஓடிய நிலையில், அவரது வீட்டை சோதனையிட்டதில் அங்கு போலி மதுபான ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது. அங்கிருந்து 430 மதுபாட்டில்கள், போலி மதுபாட்டில் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடியை மூடுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், தலைமறை வாக இருந்த சதீஷ்குமாரை காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சின்ன சப்தலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முபாரக் என்பவர்தான் போலி மதுபான பாட்டில் தயாரிக்க காரணமானவர் என கூறியுள்ளார். மேலும், தலைமறைவாகவுள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்