மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய மத நல்லிணக்கத்தை நாங்கள் விரும்புகிறோம் : பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஜி.கே.வாசன் கருத்து

By செய்திப்பிரிவு

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய மத நல்லிணக்கத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் மிகவும் இணக்கமாக செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளன. ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால், அந்த குடும்பம் கல்வியறிவு பெறும். குடும்பம் கல்வி அறிவு பெற்றால், சமுதாயமே கல்வி அறிவு பெறும்.சமுதாயம் கல்வி அறிவு பெற்றால்,நாடே கல்வி அறிவு பெற்றதாக அர்த்தம். பெண்களுடைய வளர்ச்சிநாட்டினுடைய வளர்ச்சி. தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அரசு தரப்பில் அதிக திட்டங்கள் உள்ளன. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500 அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு விலையில்லா 6 சிலிண்டர்கள், சூரிய ஒளி அடுப்பு, மகளிர் கடன் ரத்து என அனைத்தையும் அதிமுக செய்ய உள்ளது.மக்களவைத் தேர்தலில் மக்களிடம்ஏமாற்றி திமுக வாக்கு வாங்கியது.ஏமாற்றியவர்களை இந்த தேர்தலில், நீங்கள் ஏமாளியாக்க வேண்டும்.

ஜாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கு அப்பால், இந்த கூட்டணி செயல்படுகிறது. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கான சலுகைகள், திட்டங்களை முறையாக கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். அதிமுக கூட்டணிக்கு மதவாதம் கிடையாது. மக்களின்எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய மதநல்லிணக்கத்தை நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்