துப்புரவுத் தொழிலாளர் விழிப்புணர்வுக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

‘விழுதுகள்' திட்ட ஒருங் கிணைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர். துப்புரவுத்தொழிலாளர் ராணி வரவேற்றார்.

முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான அரசு நலத்திட்டங்கள், மறுவாழ்வுச் சட்டம் - 2013-ஐ முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். குப்பைத் தொட்டியில்குப்பை போட பொதுமக்களுக்குவிழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

துப்புரவுப் பணி செய்யும்போது, இடையூறு ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு தர வேண்டும். பணியின்போது விபத்து மற்றும் பாதிப்பு ஏற்படுமாயின் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுச் சட்டம் 2013-ன்படி இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.12000 வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, முன்னுரிமை அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்