அதிமுக கூட்டத்துக்கு சென்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் : திமுக பிரமுகர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரனை ஆதரித்து, திருப்பூர் பெரியதோட்டம், கோம்பைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் செயலாளர் சேக் தாவூத் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திருப்பூர் - காங்கயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் ஜபின் (24) மற்றும் பிரியங்கா ஆகியோர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளனர். அந்த வழியாக வந்த 45-வது வார்டு திமுக உறுப்பினர் அமான் (எ) அக்பர், ஜபினை தகாத வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாராம். இதுதொடர்பான புகாரின் பேரில், தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்