பாலுச்செட்டி சத்திரம் அருகே - அரசு பேருந்து விபத்தில் சிக்கி துணை ராணுவ வீரர்கள் காயம் :

By செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து துணை ராணுவ வீரர்களை அழைத்துக் கொண்டு சென்ற அரசு பேருந்து, விபத்துக்குள்ளானதில் 15 துணை ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்னையிலிருந்து, ஆரணி நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் அந்த பஸ் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அமைக்கும் பணிகளுக்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கனரக இயந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநர் உட்பட 15-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காயமடைந்த வீரர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த பாலுச்செட்டி சத்திரம் போலீஸார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்