கிடப்பில் போடப்பட்ட - பல்வேறு திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும் : திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

நெய்வேலி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சபா ராஜேந் திரன் நெய்வேலி வட்டம் -21, 30 மற்றும் நெய்வேலி நகரம் என்எல்சி இந்தியா நிறுவன பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது நெய்வேலியில் முதன்மை சங்கமாக உள்ள என்எல்சி தொமுச சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

அப்போது அவர் பேசுகையில், “தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து பல்வேறு கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்துள் ளேன். சமூக நலக் கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன். பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்து கொடுத்துள்ளேன். புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளேன். தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பல்வேறு திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும். மேலும், தொகுதி முழுவதும் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன். குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். என்எல்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக உள்ள வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு இல வசமாக வீட்டு மனை பெற்றுத் தருவேன்.

பழுதடைந்த சாலை களை சிமெண்ட் சாலையாக அமைத் துத் தருவேன்” என தெரிவித்தார். உடன் என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்