வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரத்தில் வழிவிடுமுருகன் கோயிலின் 81-ம் ஆண்டு

பங்குனி உத்திரத் திருவிழா நேற்று அதிகாலை துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பால் காவடி,

பறவைக் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வழிவிடு முருகன், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் அமைந்துள்ள

சுப்பையா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் ஊரகப் பகுதியில் உள்ள தொருவளூர், குமரய்யா கோயில், முடிவீரன்பட்டினம் முருகன் கோயில், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 50 முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE