தேர்தலில் காவல் துறையினர் நேர்மையாக பணியாற்ற வேண்டும் : அரியலூர் எஸ்.பி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலின்போது காவல்துறையினர் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என மாவட்ட எஸ்.பி வீ.பாஸ்கரன் அறிவுறுத்தினார்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பிரிவு காவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அரியலூரில் நேற்று நடை பெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி வீ.பாஸ்கரன் தலைமை வகித்து பேசியதாவது: வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் காவலர்கள் சுத்தமான சீருடையில், அடையாள அட்டை, டார்ச்லைட், லத்தி வைத்திருக்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் மாலை முதல் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்சியின் சின்னம், அடையாளம், சுவ ரொட்டி, கொடி உள்ளிட்டவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோ ருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர்கள் தவிர அனுமதி பெறாத எவரையும் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கக்கூடாது. பணியில் இருக்கும் காவலர்கள் அரசியல் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். அனைவரும் நேர்மை யான முறையில் பணியாற்ற வேண்டும்.

கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் காவலர்கள் முகக்கவசம், கிருமிநாசினி ஆகிய வற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

வாக்குப் பெட்டி அருகில் சம்பந்தம் இல்லாத எவரையும் அனுமதிக்கக் கூடாது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்