தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவைக் கண் டித்து அதிமுக சார்பில் தி.மலை மாவட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டுள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பிரச்சாரம் செய்து வரு கிறார்.
அப்போது அவர், ‘‘முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், முதல்வர் பழனிசாமியை தரக் குறைவாக விமர்சித்த திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும். தேர்தல் பிரச்சாரம் செய்ய அவருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த ஆ.ராசா, முதல்வர் உள்ளிட்ட அதிமுக வினரை விமர்சித்து பேச தகுதி இல்லை’’ என்றனர்.
மேலும் அவர்கள், பெண்களை கிண்டல் செய்யும் வகையில் பேசி வரும் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் பிரச்சாரத்துக்கும் தடை விதித்து, அவரையும் கைது செய்ய வேண்டும். தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். திமுக படுதோல்வி அடையும் என்றனர்.
இதையடுத்து அவர்கள், ஆ.ராசாவை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago