சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது.
அண்ணா நுழைவு வாயிலில் இருந்து விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புறப்பட்டது. பேரணியை மகளிர் திட்ட அலுவலர் சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி)அமித்குமார், ஆட்சியரின் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், சின்னக் கடை தெரு, தேரடி வீதி, ராஜ கோபுரம், திருவூடல் தெரு, செங்கம் சாலை, அரசு கலைக் கல்லூரி, அடி அண்ணாமலை, அபய மண்டபம், காஞ்சி சாலை வழியாக வந்த பேரணி அண்ணா நுழைவு வாயிலை வந்தடைந்தது. பேரணியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என முழக்கமிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago