தபால் வாக்குப்பதிவு செய்த அரசு அலுவலர்கள் - விடுபட்டவர்கள் ஏப்ரல் 3-ம் தேதி தபால் வாக்களிக்க வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அந்தியூர், பவானிசாகர் மற்றும் கோபி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது;

மாவட்டம் முழுவதும் உள்ள 2,741 வாக்குச்சாவடிகளில் 13 ஆயிரத்து 160 பேர் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர். அவர் களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த 18-ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட பயிற்சி இன்று (நேற்று) அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்க ளின் செயல்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் முறை, வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு சதவீதம் குறித்துதலைமையிடத்திற்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பு வது, வாக்குப் பதிவு நேரம்முடிவடைந்த பின்னர்வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருப்போர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பில் கணினி குலுக்கல் தேர்வு மூலம் பணியாளர் எந்த சட்டப்பேரவைத் தொகுதி, வாக்குச்சாவடி பணியில் ஈடுபடஉள்ளார் என்று தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் பங்கேற்றுள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கும்போதே தபால் வாக்கு அளிப்பதற்காக படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப் பட்ட படிவங்கள், பெறப்பட்டது. வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் அவர்கள் தபால் வாக்கு பெட்டியில் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தபால் வாக்கினை அளிக்காத வாக்குச்சாவடி அலுவலர்கள் 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கும் ஏப்ரல் 3-ம் தேதியன்று நடைபெறும் பயிற்சியின் போது தபால் வாக்கினை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9,832 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர்.இவர்களுக்கு கடந்த 14-ம் தேதி முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் அலுவலர்கள் எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் பணிபுரிய உள்ளனர் என்பது கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. மேலும், பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடத்தில் தபால் வாக்கு அளிப்பதற்காக சிறப்பு வாக்குப் பதிவு அறை அமைக்கப்பட்டிருந்து. அங்கு அலுவலர்கள் தபால் வாக்கு பதிவு செய்தனர்.

சேந்தமங்கலத்தில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார். சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வே. ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்