பண்ருட்டி சட்டமன்றதொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழகவாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வருகிறார்.
இவர் நேற்று அண்ணா கிராமம் ஒன்றியம் பூண்டி, பனப்பாக்கம், வரிஞ்சிபாக்கம், கண்டரக் கோட்டை, புலவனூர்கிராமத்தில் தீவிரமாக வாக்கு சேரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் பயணம்செய்து வாக்கு சேகரித்தார். அவருக்கு வழி நெடுக பெண்கள்ஆரத்தி எடுத்து நெற்றியில்வெற்றிதிலகமிட்டு வரவேற்றனர். அப்பகுதியில் சிலம்பம் கற்றுக் கொண்டிருந்த சிறார்களைச் சந்தித்து, அந்தப் பயிற்சி குறித்து அவர் கேட்டறிந்தார். வேல்முருகனும் அவர்களோடு சிலம்பம் ஆடி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான திமுக, காங்கிரஸ், வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம்லீக், கம்யூ கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், மாவட்ட, ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago