பழிவாங்கும் கருவியாக வருமானவரித் துறை : மத்திய அரசு மீது சீமான் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பிறரை பழிவாங்குவதற்கான கரு வியாக வருமானவரித் துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டி யிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை நேற்று புதுக்கோட்டை யில் அறிமுகம் செய்துவைத்து பேசிய அவர், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய் யப்பட்டு வருவது மத்திய அரசின் இயலாமையைக் காட்டுகிறது. தன்னாட்சி அதிகாரமுள்ள வருமான வரித் துறையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி தனக்கான அமைப்பாக மாற்றி வருகிறார் பிரதமர் மோடி. பிறரை பழிவாங்கும் நடவடிக்கைக்கு கருவியாக வருமானவரித் துறை பயன் படுத்தப்படுகிறது.

ஒரு கருத்தைக் கூறியோ, ஆட்சியின் சிறப்புகளைக் கூறியோ, வாக்குறுதிகளை அளித்தோ வாக்கு கேட்பதற்கு அதிமுக, பாஜக கூட்டணியினரிடம் ஒன்றும் இல்லாததால், இரவில் மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

பின்னர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கடைவீதியில், திருவையாறு தொகுதி வேட்பாளர் து.செந்தில்நாதனை ஆதரித்து சீமான் பேசியது: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுகவுக்குப் பதிலாக திமுக, திமுகவுக்குப் பதிலாக அதிமுக என வருவதை மட்டுமே மாற்றம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது மாற்றம் அல்ல, பெருத்த ஏமாற்றம். அடிப்படையிலேயே அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி வேட்பாளர் ராம.அரவிந்தனை ஆதரித்து, மன்னார்குடியில் சீமான் பேசியது:

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இலவச திட்டங்கள் முற்றிலும் நிறுத்தப்படும். தங்களுக்கு தேவையானவற்றை மக்களே வாங்கிக்கொள்வதற்கு உரிய பொருளாதார திட்டங்கள் நிறைவேற்றப்படும். அறிவு சார்ந்த கல்வி இலவசமாக வழங்கப்படும். விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துகொள்ளும் உரிமை விவசாயிகளுக்கே வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்