சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் குழந்தை களை பிரச்சாரத்துக்கு பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டும் என தேசிய குழந்தை கள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது: தேர்தலில் கோஷமிடுதல், துண்டறிக்கை கொடுத்தல், சுவ ரொட்டிகளை ஒட்டுவது, பேரணியாக செல்வது, கொடி பிடிப்பது, தோரணம் கட்டுவது போன்றவற்றுக்கு குழந்தைகளைப் பயன்படுத்து வது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் துக்கு புகார்கள் வந்துள்ளன.
இது குழந்தைகளின் உரிமைகளை மீறுவதோடு, தர நிலையை குறைப்பதாகவும் உள்ளது. எனவே, தேர்தல் பிரச் சாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் பரிந்து ரையாகும்.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் காணூங்கோ வழியாக அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆகியோரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago