தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியை ராணிப்பேட்டை ஆட்சியர் ஆய்வு :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் உள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டமுதியோர், மாற்றுத்திறனாளி கள் உள்ளிட்டோர் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அரக்கோணம் (தனி) தொகுதியில் 20 மாற்றுத் திறனாளிகள், 104 முதியோர், சோளிங்கர் தொகுதியில் 87 மாற்றுத்திறனாளிகள், 187 முதியோர், ராணிப்பேட்டை தொகுதியில் 21 மாற்றுத் திறனாளிகள், 64 முதியோர், ஆற்காடு தொகுதியில் 43 மாற்றுத்திறனாளிகள், 158 முதியோர் என மொத்தம் 684 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம், தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஒவ்வொரு தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தேர்தல் குழுக்கள் நேற்று ஈடுபட்டனர்.

இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார். மேலும், பெறப்பட்ட தபால் வாக்குகள் முறையாக பெட்டிகள் சேர்க்கப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்