திருப்பூர் பெரிய கடைவீதியில் உள்ளது பெரிய பள்ளிவாசல். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால்,மதிய தொழுகைக்கு ஏராளமான முஸ்லிம்கள் வந்தனர். இதையடுத்து, அவர்களிடம் ஆதரவு கோரி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், அமமுக வேட்பாளர் விசாலாட்சி ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த முஸ்லிம்கள், மைக் உபயோகித்து வாக்கு சேகரிக்கக்கூடாது என திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திமுக-அமமுக தொண்டர்களிடையே வாக்குவாதம், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தெற்கு போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago