காஞ்சிபுரம் மாவட்டத்தில் - 4 மகளிர் வாக்குச் சாவடிகள் உருவாக்கம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 மகளிர் வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மகளிர் வாக்குச் சாவடிகளில் பெண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இங்கு பணிபுரிபவர்களும் மகளிராகவே இருப்பர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொகுதிககு ஒரு மகளிர் வாக்குச் சாவடி வீதம் 4 மகளிர் வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நங்கநல்லூரில் உள்ள பிரில்லியன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியிலும், பெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வல்லம் அங்கன்வாடி மையத்திலும், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், செவிலிமேடு அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இந்த மகளிர் வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடி முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்