விழுப்புரம் அருகே - திரவுபதியம்மன் கோயில் தேரோட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே மேல்பாதியில் திரவுபதியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த திரவு பதியம்மன், தர்மராஜா கோயில் விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும், விநாயகர், திரவுபதி, அர்சுனன், மகாவிஷ்ணு ஆகிய சுவாமிகள் இரவில் வீதியுலா நடந்தது. கடந்த 23-ம்தேதி திருக்கல்யாண உற்சவம் முடிந் தவுடன், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு அம்மன், அர்சுனன், மகாவிஷ்ணு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அர்சுனன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் 33 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதியின் வழியாக கோட்டையை சென்றடைந்தனர். இதனை தொடர்ந்து மகாபாரதம் சொற்பொழிவு நடந்தது, கோட்டையை கலைப்பது மற்றும் அரவான் பலி நடந்தது. திருத்தேர் மீண்டும் தோளில் சுமந்து கொண்டு கோயிலை மாலை வந்தடைந்தனர். பின்னர் தேர் முன் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்தது. தொடர்ந்து நடந்த தீ மிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்